Events

  • Start Date 23/02/2019
  • Start Time 10:00 AM
  • End Date 01/03/2019
  • End Time 02:00 PM
  • Location செட்டிப்புண்ணியம்

About Event

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டமும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம். இந்நிகழ்வானது செட்டிப்புண்ணியம் கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் அவர்கள் துவங்கி வைத்தார். அத்தருணத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கா. மதியழகன் அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செட்டிப்புண்ணியம் கிராமத்தில் உள்ள திருகைலாசநாதர் கோயில் ஆலயம் தூய்மைப்படுத்தல், திருதேவநாதப் பெருமாள் கோயில் வளாகம் தூய்மைப்படுத்தல், அங்கன்வாடி மைய சிறுவர் விளையாட்டுத்திடல் தூய்மைப்படுத்தல், தியாகராசர் மற்றும் மருதீஸ்வரர் கோயில் வளாகம் தூய்மைப்படுத்தல், துவக்கப் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தல், பொது வெளியில் மரம் நடு விழா ஆகிய தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் ஒற்றுமையை மேம்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாழ்க்கையோடு இணைந்த கலைகள், உடல் உறுப்பு தானம் உயரிய தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் விழிப்புணர்வு, தூய்மை இந்தியா விழிப்புணர்வு, மரம் வளர்த்தல் மழை பெருவதன் பயன் குறித்து விழிப்புணர்வு பேரணி, சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

செட்டிப்புண்ணியம் தொடக்கப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் செயலாகப் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓட்டம், சாக்குப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி, ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு 2019 மார்ச் 1 ஆம் நாள் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் உட்பட பேராசிரியர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

Need help?