தமிழ்த்துறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எழில்மிகு வளாகமாகத் திகழ்கிற எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற இந்நிறுவனம் 1993-94ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் தமிழ்த்துறையின் செயல்பாடுகள், கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் வெகுசிறப்பான பங்களிப்பை நல்கி வருகின்றது.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும்பொருட்டு ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், நாடகம், பாட்டு எனப் பல்வேறு  கலை இலக்கியப் போட்டிகள் நடத்தி ஊக்கப்படுத்துவதோடு, வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் மிகச்சிறந்த ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று அதன்மூலம் மாணவர்கள் தங்கள் ஆளுமைத் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உறுதுணையாகச் செயல்பட்டு வருகின்றது தமிழ்த்துறை.

வளாகத்தேர்வுகளிலும் அரசுத்துறைச் சார்ந்த தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்புப் பெற திறன்வளர் ஆலோசனைகளை வழங்கிவரும் துறையாகத் தமிழ்த்துறை இயங்கி வருகின்றது.

மாணவர்கள் எளிதாகத் தேர்ச்சிபெற துறைப்பேராசிரியர்கள் வழிகாட்டி வருகின்றனர். பாடத்திட்டம் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு, வினாவங்கி, வினா அமைப்பு, விடைக்குறிப்புகள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி அலகுத்தேர்விலும் பருவத்தேர்விலும் வெற்றிபெற உதவி வருகின்றது. தேர்ச்சிபொறாத மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்தி, தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களை முன்னேற்றுவதோடு, பேராசிரியர்கள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கித் தங்கள் திறன்களையும் மேம்படுத்தி வருகின்றனர்.        

நோக்கம்

  • தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையினையும் சிறப்பினையும் மாணவர்களுக்கு உணர்த்துதல்.
  • தமிழிலக்கியத்தில் படைப்பாற்றல் மிக்க மாணவர்களை ஊக்குவித்து உருவாக்குதல்.
  • மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களாக மாணவர்களை வளர்த்தெடுத்தல்.

செயல்பாடுகள்

  • மாணவர்களுக்குத் தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதவும் படிக்கவுமான பயிற்சி வழங்குதல்.
  • குழுமனப்பான்மை, தனித்தன்மை, தலைமைப் பண்பு முதலிய பண்புகளை வளர்த்தல்.
Need help?