02.01.2023 அன்று சிங்கபெருமாள் கோயில் நரசிம்மர் கோயில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் ஒழுங்காற்றுப்பணிகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் நகரில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வில் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி
நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஒழுங்காற்றுப்பணியில் ஈடுபட்டனர். காவல்துறை, பொதுமக்கள், இந்து சமய அறநிலைத்துறையினருக்கு உதவும் வகையில் போக்குவரத்தை நெறிப்படுத்துதல் , அன்னதானம் பரிமாறுதல் , கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் . முதியோர் , மாற்றுத்திறனாளி பக்தர்கள் சாமி தரிசனம் காண உதவுதல், ஆகிய பணிகளில் ஈடுபட்டனர்.