Events

  • Start Date 26/01/2023
  • Start Time 08:00 AM
  • End Date 26/01/2023
  • End Time 09:00 AM
  • Location SRMASC Campus

About Event

எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டாங்குளத்தூர். நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக இந்தியநாட்டின் எழுபத்து நான்காம் ஆண்டு குடியரசு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கல்லூரி மாணவர்கள் பாட ,  மூவர்ணக்கொடியை கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர். கா.சரவணநாதன் ஏற்றிவைத்து குடியரசின் சிறப்புகளையும் குடிமக்களின் கடமைகளையும் விவரித்து பேசினார். நன்றியுரையினை கல்லூரியின்  நாட்டுநலப்பணித்திட்ட  அலுவலர் திரு.செ.பாலமுருகன் அவர்கள் நிகழ்த்த , நிகழ்வின் நிறைவாக நாட்டுப்பண் பாடப்பட்டது. விழாவில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்டதஅலுவலர் முனைவர்.யுவராஜ் அசவ்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் நாட்டுநலப்பணித்திட்ட , இளையோர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஐம்பது பேர் கலந்துகொண்டணர்.

Need help?