தமிழரின் தற்காப்புக் கலையில் சிலம்பம். தமிழரின் தற்காப்புக் கலையான சிலம்பம் குறித்த கலை நிகழ்ச்சி 14.12.2021 ஆம் நாள் பிற்பகல் 2.30 மணியளவில் நமது கல்லூரியின் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கமாக நமது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை வழங்க நமது கல்லூரியின் கணினி அறிவியல்துறை பேராசிரியர் சு.செல்வகுமார் அவர்கள் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்டோரை வரவேற்று அமர்ந்தார். வாழ்த்துரை வழங்கிய துணைமுதல்வர் கா. மதியழகன் அவர்கள் தமிழரின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான சிலம்பம் குறித்தும் அதன் இன்றியமையாமைக் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து வாழ்த்தியமைந்தார். தலைமையுரை வழங்கிய முதல்வர் முனைவர் இரா.வாசுதேவராஜ் அவர்கள் கலை கலைக்காகவே என்ற தத்துவத்தின் அடிப்படையில் நலிந்து வரும் கலைகளுள் ஒன்றான சிலம்பத்தை மாணவர்கள் விழிப்போடு கற்று, காத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லது மாணவர்களின் கடமை என்று வாழ்த்தியமைந்தார். நிகழ்த்துக்கலைஞர்களைப் பேராசிரயர் செ. பாலமுருகன் அறிமுகப்படுத்தி கலைகளின் சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கினார். சிலம்பாடிய மாணவர்கள்
செல்வன். ராகுல் (வணிகவியல் மற்றும் தகவல் மேலாண்மையியல் துறை)
செல்வன். சரண்ராஜ் (காட்சித்தகவலியல் துறை)
3 செல்வன். தீபக் (பள்ளி மாணவர்) இந்நிகழ்வின் நிறைவாக நன்றியுரையை உயிரிவேதியியல்துறைப் பேராசிரியர் ம.யுவாராஜ் அவர்கள் விழாவில் கலந்துகொண்ட துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நவின்றார்