Events

  • Start Date 19/10/2022
  • Start Time 10:30 AM
  • End Date 19/10/2022
  • End Time 02:00 PM
  • Location வள்ளியம்மை அரங்கம்

About Event

தமிழ்த்துறை நடத்தும் கலை இலக்கிய நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா 19.10.2022 காலை 10.30 மணியளவில் வள்ளியம்மை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக முனைவர் கை. சங்கர் எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) நந்தனம், அவர்கள் வருகைத்தந்து ”இலக்கியமும் திரைப்படமும்”  எனும் பொருண்மையில் உரை நிகழ்த்தினார்.  நிகழ்ச்சியின் தொடக்கமாகத் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் கி. சுந்தரராஜ் வரவேற்புரை நிகழ்த்த, கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் அவர்கள் தலைமை ஏற்க, தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியரும் கல்லூரியின் துணை முதல்வருமான பேராசிரியர் கா. மதியழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். விழாவில் சுதந்திர தினவிழாவினைச் சிறப்பிக்கின்ற வகையில் நடத்தப்பெற்ற “விடுதலை வீரர்கள்” எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டியில் முதல் மூன்று நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெற்றது. நன்றியுரையினை வணிகவியல் துறை மாணவர் செல்வன் அரிஷ் கார்த்தி வழங்க, தொகுப்புரையினை செல்வி யுவராணி மற்றும் மோகனப்பிரியா ஆகியோர் வழங்கினர்.

Need help?
Application 2024-25