ஆண்டுதோறும் தமிழ்த்துறை கலைஇலக்கியப் போட்டிகளை வெகுசிறப்பாக நடத்தி வருகிறது. அந்தவகையில் இவ்வாண்டு வருகிற ஆகஸ்டு 15.08.2022, 75ஆவது சுதந்திர நாள் விழாவினைச் சிறப்பிக்கின்ற வகையில் 10.08.2022 அன்று பேச்சுப்போட்டி ’விடுதலை வீரர்கள்’ எனும் தலைப்பில் நடத்த திட்டமிடப்பட்டு, முனைவர் கி. சுந்தரராஜ் துறைத்தலைவர் (பொ) (தமிழ்த்துறை) வரவேற்றுப் பேச. போட்டியின் விதிமுறைகளை ஒருங்கிணைப்பாளர் திருமதி மு. மஞ்சுளா (தமிழ்த்துறை) வழங்க. முனைவர் இரவிக்குமார் நுண்ணுயிரியல் துறைத்தலைவர், திரு விஜயராகவன் துறைத்தலைவர் (இந்தி), முனைவர் ஜெ. முனுசாமி தமிழ்த்துறை ஆகியோர்களை நடுவர்களாகக் கொண்டு போட்டி நடத்தபெற்றது. போட்டியில் நுண்ணுயிரியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் பட்டியல் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் அவர்கள் மற்றும் துணைமுதல்வர் பேரா. கா. மதியழகன் அவர்கள் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது.