தமிழ்த்துறையின் சார்பில் திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு 10.01.2024 முற்பகல் 10.30 -1.00 மணி அளவில் கல்லூரியின் ‘வேந்தர் அரங்கில்’ திருக்குறள் ஒப்புவித்தல் (18 பேர்) மற்றும் ‘வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்’ (கட்டுரை) (47 பேர்)எனும் தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியினைத் தமிழ்த்துறையின் துறைத்தலைவர் முனைவர் கி. சுந்தரராஜ் வரவேற்புரை நிகழ்த்த, துணைமுதல்வர் பேரா. கா.மதியழகன் வாழ்த்துரை வழங்க, சிறப்பு விருந்தினராக மின்னணுத் துறையின் உதவிப்பேராசிரியர் திருமதி தே. சுதாதேவி, தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் திருமதி மு. மஞ்சுளா ஆகியோர் நடுவராக வந்திருந்து போட்டிகளை நடத்தி முடிவுகளை அறிவித்தனர். நிகழ்ச்சியின் பார்வையாளராக உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், உயிர்த் தொழில் நுட்பவியல் மற்றும் கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறையைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை உதவிப்பேராசிரியர் திரு ம. கதிரவன் தொகுத்து வழங்கினார்.