எஸ்.ஆர் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கமும் பேரிடர் மேலாண்மைத்துறை செங்கல்பட்டும் இணைந்து நடத்திய தீயணைப்பு மேலாண்மை பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமது மாணவர்கள் விருப்பத்தோடு பங்கேற்றுப் பேரிடர் காலங்களில் தீயணைப்பு ஒலி கேட்டவுடன் எவ்வாறு செயல்படுவது? தீயை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது, தீயணைப்புக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீயணைப்பானை எவ்வாறு பயன்படுத்துவது, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கப் பயன்படுத்தும் உபகரணமுறை, ஊனமுற்றோர் உள்ளிட்டோர்களைக் காக்கும்முறைகள் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியின் வழி பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற முயற்சியும் தன்னம்பிக்கையும் உந்து சக்தியும் கையாளும் விதமும் விளக்கமுறையில் பயிற்சி எடுக்கப்பட்டது