தமிழ்த்துறையின் சார்பாக வாகை-2022, கலை இலக்கியக் கூடல் – பரிசளிப்பு விழா 10.05.2022 அன்று காலை 11.00 மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் (பொ) முனைவர் கி. சுந்தர ராஜ் வரவேற்புரையினை வழங்க, தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியரும் துணைமுதல்வருமான பேராசிரியர் கா. மதியழகன் வாழ்த்துரை வழங்க, கல்லுரியின் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து எஸ்ஆர்.எம். அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம், தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் சிறப்புரை நிகழ்த்தி பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு நூல்களும் சான்றிதழ்களும் பரிசாக வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் தமிழ்ப்பேராயமும் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ’சங்கமம்’ நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பு செய்தார். நன்றியுரையினை வணிகவியல் துறை மாணவர் செல்வன். செ. பிரவின் வழங்க, அத்துறையைச் சார்ந்த மாணவி வா. மோகனப்பிரியா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.