Events

  • Start Date 10/05/2022
  • Start Time 10:00 AM
  • End Date 10/05/2022
  • End Time 02:00 PM
  • Location கருத்தரங்க அறை

About Event

மே 08 ஆம் தேதி உலக செஞ்சிலுவை – செம்பிறை (World Red Cross and Red Crescent Day) தினமாகும். உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்சங்கத்தின் நிறுவனரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி அம்மனிதாபிமான மிக்க புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகமே கொண்டாடி வருகின்றன.

சிறிய பிராயத்திலே அயலவர் படும் இன்னல்களைக் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். 1859 ஜுன் 25ல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய, இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணி நேரம் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது. பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ”சோல்பரினோ நினைவுகள்’ என்ற நூலை எழுதினார்.

பன்னாட்டு செஞ்சிலுவை இயக்கம் இதுவரை 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசினையை வென்றுள்ளது. 1910 அக்டோபர் 30ல் உயிர் நீத்த ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948ம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. 1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர்களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டுச் செயல்படுகிறது. செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி, கொரோனா தீநுண் கிருமி, உக்ரைன் போர், பேரிடர் காலங்களின்போது பாதிப்புள்ளாகும் மக்களுக்கு உதவும் தன்மையை மேற்கொள்வதே இவ்வியக்கச் செயல்பாடாகும். 

செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

  1. மனிதாபிமானம்
  2. பாரபட்சமின்மை
  3. நடுநிலைமை
  4. சுதந்திரத் தன்மை
  5. தொண்டு புரிதல்
  6. ஒற்றுமை
  7. சர்வவியாபகத் தன்மை
Need help?