தமிழ்த்துறை சார்பில் 26.04.2022 அன்று காலை 10.30 மணிக்கு ’வாகை-2022- கலை இலக்கிய கூடல்’ எனும் நிகழ்ச்சியில் கலைமாமணி ப. சுதா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சி கல்லூரியின் கருத்தரங்க அறையில் முதல்வர் இரா. வாசுதேவராஜ் தலைமை ஏற்க, துணைமுதல்வர் பேரா. கா. மதியழகன் வாழ்த்துரை வழங்க, வரவேற்புரையை முனைவர் கி. சுந்தர ராஜ் துறைத்தலைவர் (பொ) வழங்க, நன்றியுரையினை பேரா ஜெ. முனுசாமி வழங்க, வணிகவியல் துறை மாணவி செல்வி. வா. மோகனப்பிரியா தொகுத்து வழங்கினார். பல துறையைச் சார்ந்த பேராசிரியகள் மாணவர்கள் தமிழ்த்துறையின் தன்னார்வக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.