Events

  • Start Date 12/08/2021
  • Start Time 02:30 PM
  • End Date 12/08/2021
  • End Time 04:00 PM
  • Location Seminar Hall

About Event

நமது கல்லூரியில் ‘இந்திய செஞ்சிலுவை சங்கம்’ சார்பாக 12.08.2021 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு இணையவழிக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பெற்றது. இக்கருத்தரங்கானது சர்வதேச இளைஞர் தினம், ஜெனிவா ஒப்பந்த தினம், மற்றும் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் ஐயா அவர்கள் தலைமை ஏற்றார். துணைமுதல்வர் பேராசிரியர் கா. மதியழகன் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று அமைந்தார். இக்கருத்தரங்கில் செங்கல்பட்டு மாவட்ட செஞ்சிலுவை சங்கச் செயலாளர் புலவர் இராம. மாணிக்கம் “உடல் உறுப்பு தானத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

அத்தருணத்தில் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வண்ணம் ஜெனிவா ஒப்பந்தமே செஞ்சிலுவை சங்கம் தோன்ற காரணம் என்பது குறித்து மிக அழகாக எடுத்துரைத்தார். இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் அர்பணிப்போடு முதலுதவி செய்தல், இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்குதல் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். தானம் வழங்கும் ஒவ்வொருவரும்  அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகலாம் அல்லது கல்லூரியில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலர் மூலமாகப் பதிவு செய்யலாம் என்று கருத்துரை வழங்கினார்.

மேலும் செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவைச் சார்ந்த மருத்துவர் புவனேஷ் சாய் கிருஷ்ணா அவர்கள் உடல் உறுப்பு தானத்தால் ஒவ்வொரு வருடமும் ஏற்படக்கூடிய உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்றார். உடல் உறுப்பு தானத்தின் மூலம் நமது உயிர் பிரிந்தாலும், உடல் உறுப்பின் வழி வாழும் பயனை அடைய முடியும் என்றார். இந்நிகழ்வானது மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பெரும் ஊக்கத்தை வழங்கியதன் வழி சிலர் உடல் தானமும், சிலர் உறுப்பு தானமும் வழங்க முன்வந்துள்ளனர். நிகழ்வின் இருதியாக செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் கு. கமலகிருஷ்ணன் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Need help?