எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயமும் எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ‘சங்கமம்’ கலை இலக்கியப் போட்டிகள்-(2021-2022) பேச்சுப்போட்டி நம் கல்லூரிக் கருத்தரங்க அறையில் 14.03.2022 காலை 11.00 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
முனைவர் கி. சுந்தரராஜ், துறைத்தலைவர் (பொ), உதவிப்பேராசிரியர் வரவேற்புரை வழங்க, துணைமுதல்வரும் கல்லூரியின் மூத்த பேராசிரியருமான பேரா.கா. மதியழகன் தலைமையுரை ஆற்றினார். தொடர்ந்து மின்னியல் துறையின் துறைத்தலைவரும் தேர்வுக் கண்காணிப்பாளருமான பேரா. ஹார்சிலி சாலமன் பா. வாழ்த்துறையினை வழங்க, பேச்சுப்போட்டியின் ஒருங்கிணாப்பாளர் பேரா. மு. மஞ்சுளா போட்டியின் விதிமுறைகளை மாணவர்களுக்குக் கூறினார்.
போட்டிக்கு நடுவராக வளாக அலுவலர் திரு சந்தானகிருஷ்ணன் வருகைத் தந்தார்கள். அவருடன் துறைப்பேராசியர்கள் பேரா. மு. மஞ்சுளா, மற்றும் முனைவர் கு. கமலகிருஷ்ணன் நடுவர்களாக இருந்து மதிப்பீடு செய்து துணைமுதல்வர் முன்னிலையில் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நன்றியுரை பேரா. செ. பாலமுருகன் ஆற்றினார். பார்வையாளர்களாக இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்களைச் சிறப்பித்தனர்.
பிற்பகல் 2.00 மணியளவில் காட்சித் தொடர்பியல் துறையின் ஓவிய வகுப்பறையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. அப்போட்டியினை துணைமுதல்வர் அவர்கள், காட்சித்தொடர்பியல் துறைத் தலைவர் பேரா. பொ. நடராஜன், கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் இ.ஜெ. லலித் குமார் உள்ளிட்ட அத்துறைப்பேராசிரியர்கள், மற்றும் நடுவராக வந்திருந்த காட்சித் தொடர்பியல் துறையின் பேராசிரியர் திரு. உமாசங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். ஓவியப்போட்டி முனைவர் கு. கமலக்கிருஷ்ணன் மற்றும் பேரா. செ. பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையோடு, மாணவர்கள் ஆர்வத்தோடு திரளாகக் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்றனர். முடிவுகள் நடுவரால் பரிந்துரைக்கப்பட்டது.
15.03.2022 காலை 11.00 மணியளவில் அறை எண் 302இல் துணைமுதல்வர் வாழ்த்துறை வழங்கி கவிதைப்போட்டியினைத் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. முனுசாமி மற்றும் துறைப்பேராசிரியர்கள் முன்னிலையில் போட்டி தொடங்கியது. இப்போட்டியின் முடிவுகள் துறைப் பேராசியர்களால் மதிப்பீடு செய்யப்பெற்று முடிவுகள் தெரிவு செய்யப் பட்டன.
மேற்கூறிய கலை இலக்கியப் போட்டிகளைத் ’தன்னார்வ குழு’ மாணவர்கள் வெகுசிறப்பாகச் செயலாற்றி நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.