எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் 21.03.2022 காலை 11.30 மணியளவில் அறைஎண்-106 இல் ’உலகக் கவிதை நாள் விழா’ வினைக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் கி. சுந்தர ராஜ் துறைத்தலைவர்(பொ), திரு வே. கணேசமூர்த்தி, முனைவர் ஜெ. முனுசாமி, திருமதி மு. மஞ்சுளா, முனைவர் கு. கமலகிருஷ்ணன், திரு செ. பாலமுருகன் ஆகியோரும், இரண்டாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவர்களும் உயிர்த்தொழில் நுட்பவியல் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
மாணவ மாணவியர் தங்கள் கவிதையை வாசித்தனர். பேராசிரியர்கள் முனைவர் கி. சுந்தர ராஜ், மு. மஞ்சுளா, முனைவர் கு. கமலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். முனைவர் ஜெ. முனுசாமி ’இக்கால உலகத்தமிழ் கவிதைகள்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தியதோடு மிகச்சிறந்த கவிதை நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு அவற்றினை வாசித்துக் கவிதை எழுதும் பயிற்சி பெற ஊக்கமளித்து உரை நிகழ்த்தினார். திரு செ. பாலமுருகன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.